×

பெண்கள் ஒருநாள் தொடர் இங்கிலாந்திடம் ஒயிட் வாஷ் ஆன பாகிஸ்தான்

செம்ஸ்ஃபோர்டு: இங்கிலாந்து சென்ற பாகிஸ்தான் பெண்கள் அணி 5 ஆட்டங்களை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. தொடர்ந்து முதல் 3 ஆட்டங்களில் வென்ற இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து 4வது டி20 ஆட்டம் மழை காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் கடைசி மற்றும் 5வது ஒருநாள் இங்கிலாந்தின் செம்ஸ்ஃபோர்டு நகரில் நடந்தது. அதில் டாஸ் வென்று களமிறங்கிய இங்கி வீராங்கனைகள், பாக் பந்து வீச்சை சிதறடித்தனர்.

எனவே 50ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து இங்கி 302ரன் குவித்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடி சதமடித்த நடாலியா ஆட்டமிழக்காமல் 124ரன் குவித்தார். பாக் தரப்பில் ஹனி 2 விக்கெட் கைப்பற்றினார். தொடர்ந்து 303ரன் எடுத்தால் வெற்றி என்ற பெரிய இலக்குடன் களமிறங்கிய பாக் வீராங்கனைகள் 29.1ஓவரில் 124ரன்னுக்கு சுருண்டனர். அதனால் இங்கி 178ரன் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.

பாக் அணியில் அதிகபட்சமாக முனிபா அலி 47 ரன் எடுத்தார். இங்கிலாந்து வீராங்கனைகள் ஷோபி 3, நடாலியா, லாரன் தலா 2 விக்கெட் அள்ளினர். கூடவே ஷோபி குறைந்த ஆட்டங்களில்(63) 100விக்கெட் எடுத்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 4-0 என்ற கணக்கில் கைப்பற்றியதுடன் பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்தது.

The post பெண்கள் ஒருநாள் தொடர் இங்கிலாந்திடம் ஒயிட் வாஷ் ஆன பாகிஸ்தான் appeared first on Dinakaran.

Tags : Pakistan ,White ,UK ,ENGLAND ,D20 ,Women's One Day Series UK ,Whitewashed ,Dinakaran ,
× RELATED பாக். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக...