×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் சபலென்கா மெத்வதேவ்

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதில் நேற்று 2வது சுற்று ஆட்டங்கள் நடந்தன. அதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ரஷ்ய வீராங்கனை அனஸ்டசியா போடபோவா(23வயது, 41வது ரேங்க்), சுவிட்சர்லாந்து வீராங்கனை விக்டோரிஜா கொலுபிக்(31வயது, 76வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர். அதில் அனஸ்டசியா 6-2, 6-2 என நேர் செட்களில் வென்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார். இந்த ஆட்டம் ஒரு மணி 2நிமிடங்களில் முடிந்தது.

மற்றொரு ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா(26வயது, 2வது ரேங்க்), ஜப்பான் வீராங்கனை மோயுகா உச்சிமா(22வயது, 83வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் சபலனெ்கா ஒரு மணி 2 நிமிடங்களில் 6-2, 6-2 என நேர் செட்களில் வெற்றிப் பெற்று 3வது சுற்றுக்குள் முன்னேறினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ரஷ்ய வீரர் டானில் மெத்வதேவ்(28வயது, 5வது ரேங்க்), செர்பிய வீரர் மியோமிர் கேக்மனோவிச்(24வயது, 57வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர். முதல் செட்டை 6-1 என்ற கணக்கில் வென்ற மெத்வதேவ், 2வது செட்டில் 5-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார்.

அப்போது மியோமிர் காயம் காரணமாக களத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதனால் மெத்வதேவ் 3வது சுற்றுக்கு தகுதிப் பெற்றார். கூடவே பெண்கள் பிரிவில் பவுளா படோசா(ஸ்பெயின்), எலனா ரைபாகினா(கஜகிஸ்தான்),டோனா வேகிச்(குரோஷியா), ஆண்கள் பிரிவில் செபாஸ்டியன் கோர்டா(அமெரிக்கா), கிரிகோர் டிமிட்ரோவ்(பல்கேரியா) ஆகியோரும் நேற்று 2வது சுற்றில் வென்றனர்.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் சபலென்கா மெத்வதேவ் appeared first on Dinakaran.

Tags : Sabalenka Medvedev ,French Open Tennis ,Paris ,French Open Grand Slam ,France ,Anastasia Podabova ,Viktorija Kolubic ,French Open ,Dinakaran ,
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனல்: ஸ்வியாடெக் – ஜாஸ்மின் இன்று பலப்பரீட்சை