×

ஆன்லைன் ரம்மி தற்கொலைகள் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதுதான் ஒரே தீர்வு : அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: சுவாமிமலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த தினசீலன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும், மீள முடியாத கடன்சுமை காரணமாகவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம், ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10ம் தேதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மிகவும் அரிதாக நிகழ்ந்து வந்த தற்கொலைகள் இப்போது தொடர்கதையாகி விட்டன. எனவே, ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post ஆன்லைன் ரம்மி தற்கொலைகள் உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவதுதான் ஒரே தீர்வு : அன்புமணி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Anbumani ,Chennai ,BAMA ,President ,Anbumani Ramadoss ,Dinaseelan ,Mayiladuthurai ,Swamimalai ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பான...