×

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்: சின்னர், ஸ்வியாடெக் 3வது சுற்றுக்கு தகுதி

பாரீஸ்: கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று நள்ளிரவில் நடந்த 2வது சுற்று போட்டியில் 2ம் நிலை வீரரான இத்தாலியின் 22 வயதான ஜானிக் சின்னர், 6-4, 6-2, 6-4 என்ற செட் கணக்கில், பிரான்சின் ரிச்சர்ட் காஸ்கெட்டை வீழ்த்தினார்.

ரஷ்யாவின் பாவெல் கோடோவ், 7-6, 6-4, 1-6, 7-6 என்ற செட் கணக்கில், சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவை வென்றார். ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ், 6-3, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பெட்ரோ மார்டினெசை வென்று 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.

மகளிர் ஒற்றையர் 2வது சுற்றில் நம்பர் ஒன் வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், 7-6, 1-6, 7-5 என ஜப்பானின் நவோமி ஒசாகாவை போராடி வீழ்த்தினார். இந்த ஆட்டம் 2 மணி நேரம் 57 நிமிடம் நடந்தது குறிப்பிடத்தக்கது. மற்றொரு போட்டியில் 3ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் கோகோ காப் , 6-3,6-4 என ஸ்லோவேனியாவின் தமரா ஜிடான்செக்வை வென்றார்.

The post பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர்: சின்னர், ஸ்வியாடெக் 3வது சுற்றுக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : French Open Tennis Series ,Sinner ,Sviatek ,Paris ,French Open ,Grand Slam ,France ,Janic ,Italy ,Dinakaran ,
× RELATED பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் பைனல்: ஸ்வியாடெக் – ஜாஸ்மின் இன்று பலப்பரீட்சை