×

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

டெல்லி: கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் கடந்த மூன்று வாரங்களுக்கு மேலாக கோடை மழை மிக தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று முன்தினம் கொச்சி, கோட்டயம், திருவனந்தபுரம், கொல்லம் உள்பட மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்தது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளம் புகுந்தது. கோட்டயத்தில் பல பகுதிகளில் மண் சரிவு ஏற்பட்டது.

இதனால் ஏராளமான வீடுகளும், விவசாய நிலங்களும் சேதமடைந்தன. இந்நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் இன்று தொடங்கிய பருவமழை படிப்படியாக அனைத்து மாநிலங்கள் என ஜூலை மாதம் மத்தியில் நாடு முழுவதும் பரவும். தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்கக்கடல், நிகோபார் தீவுகளில் கடந்த 19-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. கடந்த ஆண்டு கேரளாவில் தாமதமாக தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு 2 நாட்கள் முன்கூட்டியே தொடங்கியுள்ளது.

கேரளாவில் அடுத்த 5 நாட்கள் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும். கேரளாவில் கடந்தாண்டு தென்மேற்கு பருவமழை இயல்பை விட 34% குறைவாக பெய்தது. இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை சராசரியைவிட அதிகமாக பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று காலை வரை கோடை மழை 20 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது. வழக்கமாக மார்ச் 1 முதல் இன்று காலை வரை கோடை மழை 123.1 மி.மீ. பதிவாகும் நிலையில் இந்த ஆண்டு 147.9 மி.மீ.மி.மீ. மழை பெய்துள்ளது எனவும் கூறியுள்ளது.

The post கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது: இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Southwest ,Kerala ,Indian Meteorological Centre ,Delhi ,Mundinam ,Kochi ,Kottayam ,Thiruvananthapuram ,Kollam ,Southwest Monsoon ,
× RELATED குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு;...