×

மரக்கன்று நட இடம் தேர்வு

குளத்தூர், மே 30: குளத்தூர் அருகே மரக்கன்று நடுவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தை மார்க்கண்டேயன் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு செய்தார். விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் குளத்தூரை அடுத்த வைப்பார் ஊராட்சி வைகுண்டபெருமாள்புரத்தில் மரங்கள் மக்கள் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடத்தை திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கிராம மக்களுடன் மரக்கன்றுகள் நடுவதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டார்.

விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, திமுக இளைஞரணி வடக்கு மாவட்ட முன்னாள் துணை அமைப்பாளர் இம்மானுவேல், வைப்பார் ஊராட்சி தலைவர் சக்கம்மாள்ராமர், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா, கிளை நிர்வாகிகள் முருகேசன், வெங்கடேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

The post மரக்கன்று நட இடம் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Kulathur ,Markandeyan ,MLA ,Vlathikulam panchayat ,Kulathur, ,Vaipar panchayat ,Vaikundaperumalpuram ,Dinakaran ,
× RELATED குளத்தூரில் கபடி போட்டி