×

குளத்தூரில் கபடி போட்டி

 

குளத்தூர்,மே 29: குளத்தூரில் ஆண்களுக்கான கபடிப்போட்டியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ துவக்கிவைத்தார். குளத்தூர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள், அபிமன்யூ கபடி குழு சார்பில் ஆண்களுக்கான கபடி போட்டி நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற மார்க்கண்டேயன் எம்எல்ஏ, கபடிப் போட்டியைத் துவக்கி வைத்தார். இதில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் சின்னமாரிமுத்து, இளைஞர் அணி வடக்கு மாவட்ட முன்னாள் துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதி செல்வப்பாண்டி, சூரங்குடி கூட்டுறவு சங்கச் செயலாளர் ராமசந்திரன், வர்த்தக அணி முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து இரு நாட்கள் நடைபெறும் மாவட்ட அளவிலான சூரியஒளி கபடிப் போட்டியில் சுமார் 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தின. ஏற்பாடுகளை அபிமன்யூ கபடி குழுவினர் செய்திருந்தனர்.

The post குளத்தூரில் கபடி போட்டி appeared first on Dinakaran.

Tags : Kabaddi ,Kulathur ,Markandeyan MLA ,Kulathur Devendrakula Velalar Community People ,Abhimanyu Kabaddi Team ,Kabaddi Tournament ,Dinakaran ,
× RELATED குளத்தூரில் கபடி போட்டி இ.வேலாயுதபுரம் அணி முதலிடம்