- நியாயமான
- மேலூர்
- வேளாண் கல்லூரி
- காரைக்குடி சேது பாஸ்கர வேளாண்மைக் கல்லூரி
- கிராமப்புற வேளாண்மை பணி ஆய்வு நிறுவன
- தின மலர்
மேலூர், மே 30: மேலூர் அருகே வேளாண்மை கல்லூரி மாணவிகள், விவசாயிகளுக்கு பயன்படும் வகையிலான வேளாண் கண்காட்சியை நடத்தினர். காரைக்குடி சேது பாஸ்கரா வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் மாணவிகள் மேலூர் பகுதியில் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் மேலூர் அருகே பதினெட்டாங்குடி கிராமத்தில் வேளாண் கண்காட்சியை இம் மாணவிகள் அமைத்தனர். இந்த கண்காட்சியை பதினெட்டாங்குடி ஊராட்சி தலைவி சுதா ஆண்டி துவக்கி வைத்தார். ஒருங்கிணைந்த பண்ணை வேளாண்மை முறை, சோலார் நீர்பாசன முறை, பல பயிர் முறை மற்றும் நெற்பயிரில் சொட்டு நீர் பாசன முறை குறித்து மாதிரிகள் மூலம் விவசாயிகளின் சந்தேகங்களுக்கு மாணவிகள் விளக்கம் அளித்தனர்.
The post வேளாண் கண்காட்சி appeared first on Dinakaran.