×

சில்லி பாயின்ட்…

 

* பார்சிலோனா கால்பந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஹன்சி ஃபிளிக் (59 வயது) நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இவர் ஜெர்மனி கால்பந்து அணிக்கும், பேயர்ன் மூனிக் கால்பந்து கிளப் அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார்.

* மீபியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா சார்பில் விளையாட 9 வீரர்கள் மட்டுமே இருந்ததால் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட், துணை பயிற்சியாளர்கள் பிராட் ஹாட்ஜ், ஆந்த்ரே போரோவெக், தேசிய தேர்வுக் குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி ஆகொயோர் மாற்று வீரர்களாக செயல்பட்டனர். ஐபிஎல் தொடரில் விளையாடிய டிராவிஸ் ஹெட், பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் இன்னும் அமெரிக்கா சென்று அணியில் இணையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* கிலாந்து – பாகிஸ்தான் அணிகளிடையே கார்டிப், சோபியா கார்டன்ஸ் அரங்கில் நடைபெற இருந்த 3வது டி20 போட்டி கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் கைவிடப்பட்டது.

* ந்திய அணி வீரர்கள் நியூயார்க்கில் நேற்று பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில், நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி இன்னும் அமெரிக்கா சென்று சேரவில்லை. அவர் எப்போது அணியில் இணைவார் என்பது குறித்து பிசிசிஐ தரப்பிலும் இதுவரை தகவல் வெளியாகவில்லை. இந்த நிலையில், வங்கதேச அணியுடன் ஜூன் 1ம் தேதி நடக்க உள்ள பயிற்சி ஆட்டத்தில் அவர் பங்கேற்பது கேள்விக்குறியாகி உள்ளது.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Hansi Flick ,Barcelona football ,football ,Bayern Munich football ,Mibia… ,Dinakaran ,
× RELATED யுரோ கோப்பை கால்பந்து: ஜெர்மனி கோல் மழை