×

இன்புளுயன்சா பாதிப்பு குறைந்தது: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டில் இன்புளுயன்சா பாதிப்பு குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்புளுயன்சா (influenza) எனப்படுவது புளூ எனப் பொதுவாக அழைக்கப்படும். இது ஒரு தொற்று நோயாகும். இந்நோய் இன்புளுயன்சா வைரசால் உண்டாக்கப்படுகிறது. அதிக காய்ச்சல், சளி, தொண்டை வலி, தசை வலி, தலைவலி, இருமல், சோர்வாக உணர்தல் போன்றவை இந்நோய்க்கான மிகவும் பொதுவான அறிகுறிகள் ஆகும். குழந்தைகள் மற்றும் பெரியவர்களை இது அதிகம் தாக்கும். தமிழகத்தில் கடந்த ஆண்டு இன்புளுயன்சா தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக 3,544 நபர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டனர் அதில் 19 நபர்கள் இறந்தனர்.

கடந்த 2018க்கு பிறகு அதிகமாக பதிவான எண்ணிக்கை இதுவாகும். இந்த நிலையில் இந்த ஆண்டு மே மாதம் வரை 283 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுதொடர்பாக செல்வ விநாயகம் கூறியதாவது: 8 கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் தற்போது பாதிப்பு என்பது ஒன்றுமே இல்லாததாகத்தான் கருதப்படுகிறது. மேலும் கடந்த இரண்டு மாதங்களில் 50 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். பெரிய அளவிலான பாதிப்பு எந்த இடத்திலும் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி வரும் நாட்களில் இந்த பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு குறைவு தான். இவ்வாறு அவர் கூறினார்.

The post இன்புளுயன்சா பாதிப்பு குறைந்தது: சுகாதாரத்துறை தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் அனுமதி இல்லாத ஆம்னி...