×

டி.20 உலக கோப்பை பயிற்சி போட்டி; நெதர்லாந்திடம் இலங்கை அதிர்ச்சி தோல்வி: நமீபியாவை பந்தாடிய ஆஸ்திரேலியா

லாடர்ஹில்: 9வது ஐசிசி டி.20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட்இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் 2ம் தேதி தொடங்குகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கின்றன. தலா 5 அணிகள் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டி நடத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது பயிற்சி போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த போட்டியில் இலங்கை- நெதர்லாந்து அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன் எடுத்தது.

பின்னர் களம் இறங்கிய இலங்கை 18.5ஓவரில் 161 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் 20 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்து வெற்றி பெற்றது.இன்று அதிகாலை நடந்த மற்றொரு பயிற்சி போட்டியில், ஆஸ்திரேலியா-நமீபியா மோதின. முதலில் பேட் செய்த நமீபியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 119 ரன் எடுத்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 10 ஓவரில் 3 விக்கெட் இழந்து 123 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக டேவிட் வார்னர் 54ரன் அடித்தார்.

The post டி.20 உலக கோப்பை பயிற்சி போட்டி; நெதர்லாந்திடம் இலங்கை அதிர்ச்சி தோல்வி: நமீபியாவை பந்தாடிய ஆஸ்திரேலியா appeared first on Dinakaran.

Tags : T.20 World Cup Practice Match ,Sri Lanka ,Netherlands ,Australia ,Namibia ,Lauderhill ,ICC T20 World Cup cricket ,West Indies ,USA ,T.20 World Cup ,Dinakaran ,
× RELATED இந்தியா – இலங்கை பாலம்: ஆய்வு பணி விரைவில் நிறைவு