×

பாலக்கோடு வனப்பகுதியில் பெண் யானை சுட்டுக்கொலை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வனச்சரகம், மொரப்பூர் காப்புக்காடு சொக்கன்கொட்டாய் அருகே அடர்ந்த வனப்பகுதியில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று அழுகிய நிலையில் நேற்று முன்தினம் இறந்து கிடந்தது. பாலக்கோடு வனத்துறையினர் ரோந்து பணியின்போது இதனை கண்டறிந்தனர். இதையடுத்து கால்நடை மருத்துவர் வரவழைக்கப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. உடலில் காயம் இருந்ததால், யானையின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்த கொடக்கரை பகுதியை சேர்ந்த 4 பேர் வனத்துறையினரிடம் சரணடைந்தனர். அவர்களிடம் விசாரித்ததில், யானையை சுட்டுக்கொன்றது தெரிந்தது. மேலும், இதில் தொடர்புடைய சிலரையும் வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

The post பாலக்கோடு வனப்பகுதியில் பெண் யானை சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Palakode forest ,Dharmapuri ,Chokankottai, Morapur reserve forest ,Palakodu forest, ,Dharmapuri district ,Palakodu forest department ,Palakodu forest ,
× RELATED மூதாட்டி திடீர் சாவு