×

வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்..!!

திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெறுகிறது. பொன்னூர் கிராமத்தில் தொடர்ந்து மர்மநோய் தாக்கி 12 மாடுகள், 6 ஆடுகள் உயிரிழந்தது. மருத்துவ பரிசோதனையில் கொடி பாக்டீரியா நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கால்நடை மருத்துவர் விஜய் தலைமையில் கால்நடை மருத்துவ தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. பொன்னூர் கிராமத்தை சுற்றியுள்ள சுமார் 8 கி.மீ. தூரம் உள்ள 15 கிராமங்களில் கால்நடை மருத்துவ தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post வந்தவாசி அடுத்த பொன்னூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம்..!! appeared first on Dinakaran.

Tags : Ponnur village ,Vandavasi ,Tiruvannamalai ,Ponnoor ,
× RELATED (தி.மலை) கர்ப்பமாக்கி கடத்திய நெல்...