×

(தி.மலை) கர்ப்பமாக்கி கடத்திய நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் போக்சோவில் கைது வந்தவாசி அருகே பிளஸ் 2 மாணவியை

 

வந்தவாசி, ஜூன் 3: வந்தவாசி அருகே பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கி கடத்திய வழக்கில் தலைமைவாக இருந்த நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர். இவரது உடலில் மாற்றம் தெரிந்ததால் தாய் என்னவென்று விசாரணை நடத்தினார். அப்போது பழவேரி கிராமத்தைச் சேர்ந்த ஜானகிராமன் (25), நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் பழகி வந்ததாகவும், பல முறை கட்டாயப்படுத்தி உல்லாசமாக இருந்ததாகவும், வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் பெற்றோரிடம் கூறினார். இதனை அறிந்த பெற்றோர் போலீசில் புகார் செய்யலாம் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த மாதம் 24ம் தேதி அன்று வீட்டின் பின்பக்கம் சென்ற மாணவியுடன் அங்கு வந்த ஜானகிராமன் பேசிக் கொண்டிருந்தார். வெகுநேரமாகயும் மாணவி வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த தாய் வீட்டில் பின் பக்கம் சென்று பார்த்துள்ளார். அப்போது மாணவியின் தாயைக் கண்டதும் பைக்கில் மாணவியை ஜானகிராமன் கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து மாணவியின் தாய் தெள்ளார் போலீசில் கடந்த 25ம் தேதி புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சத்யா போக்சோ, கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து நெல் அறுவடை இயந்திர உரிமையாளரை வலை வீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று எஸ்.காட்டேரி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியா, ஏட்டு தாேமாதிரன், போலீசார் புகழேந்தி வீராமுத்து ஆகியோர் ேராந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த நெல் அறுவடை இயந்திரதில் இருந்த டிரைவர் போலீசாரை கண்டதும் நெல் அறுவடை இயந்திரத்தில் இருந்து குதித்து தப்பியோடினார். போலீசார் அவரை துரத்தி பிடித்து விசாரணை மேற்கொண்டதில் ஏற்கனவே பிளஸ் 2 மாணவி கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த ஜானகிராமன் என தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது ெசய்து மாணவியை புதுவையில் உள்ள நண்பர் மூலமாக அடைத்து வைக்கப்பட்டவரை போலீசார் மீட்டனர். பின்னர் அந்த மாணவியை செய்யாறில் உள்ள அரசினர் பெண்கள் தங்கும் விடுதியில் சேர்த்தனர். கைது செய்யப்பட்ட ஜானகிராமன் திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

The post (தி.மலை) கர்ப்பமாக்கி கடத்திய நெல் அறுவடை இயந்திர உரிமையாளர் போக்சோவில் கைது வந்தவாசி அருகே பிளஸ் 2 மாணவியை appeared first on Dinakaran.

Tags : Th. Malai ,Vandavasi ,Bokso ,Vandavasi, Tiruvannamalai district ,POCSO ,Dinakaran ,
× RELATED (தி.மலை) வீட்டிலிருந்து வெளியேறிய...