×
Saravana Stores

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது

 

திருப்பூர், மே 29: தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூரில் அரசால் இலவசமாக வழங்கக் கூடிய ரேசன் அரிசி கள்ள சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஐஜி ஜோசி நிர்மல்குமார் உத்தரவின் படி எஸ்பி சந்திரசேகரன், டிஎஸ்பி சுரேஷ்குமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் துளசிமணி தலைமையிலான போலீசார் திருப்பூர் மாவட்டம் முழுவதும் ரோந்து பணியைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதன்படி அவ்வப்போது ரேசன் அரிசியை கடத்தி வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களுக்கு கொண்டு செல்வதை பிடித்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 5 மாதத்தில் ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாகவும், பதுக்கி வைத்திருந்தது தொடர்பாகவும் 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய 142 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 30.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய 40 வாகனங்களையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tirupur ,IG ,Joshi Nirmalkumar ,SP ,
× RELATED கோவை, திருப்பூர், ஈரோட்டிலிருந்து 3...