×

பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோ… சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக்

சென்னை : பாலிவுட் நடிகைகளான அனன்யா பாண்டே, சாரா அலி கான் ஆகியோரின் ஹாட் வீடியோக்களை தேடி ராஜஸ்தான் இளம் வீரர் ரியான் பராக் பார்த்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ராஜஸ்தான் அணி 3வது இடத்தில் தொடரை நிறைவு செய்துள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான குவாலிபயர் 2வது போட்டியில் தோல்வியடைந்து வெளியேறியது. ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் 14 போட்டிகளில் விளையாடி 4 அரைசதம் உட்பட 573 ரன்களை விளாசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதன் மூலம் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை ரியான் பராக் பிடித்தார்.

இதனால் ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் ரியான் பராக்கை தேர்வு செய்ய வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் இளம் வீரரான ரியான் பராக் யூடியூபில் பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோக்களை தேடி பார்த்துள்ளது ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் அணியின் இளம் வீரர் ரியான் பராக் நேற்று யூடியூப் நேரலையில் கேம் விளையாடுவதை நேரலை செய்தார். அப்போது சில பதிப்புரிமை இசையை யூடியூபில் தேடினார். இதில் தான் ரியான் பராக் பிரச்னையில் சிக்கினார். யூடியூபில் இசையை தேடிய போது, அவர் திரையை மறைக்க மறந்துவிட்டார்.

அப்போது அவரது தேடல் ஹிஸ்ட்ரியில் பாலிவுட் நடிகைகளான அனன்யா பாண்டே ஹாட், சாரா அலி கான் ஹாட் என்று இருந்தது வெளிப்படையாக தெரிய வந்தது. ரியான் பராக்கின் தேடல் தொடர்புடைய ஸ்க்ரீன்ஷாட்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றன. இதனால் சோசியல் மீடியாவில் அவர்மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்கு சுய ஒழுக்கம் தேவை என்று கூறப்பட்டு வரும் நிலையில், பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோக்களை தேடி ரியான் பராக் பார்த்துள்ளதை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

The post பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோ… சர்ச்சையில் சிக்கிய ரியான் பராக் appeared first on Dinakaran.

Tags : Bollywood ,Ryan Barak ,Chennai ,Rajasthan ,Ryan Barrack ,Ananya Pandey ,Sara Ali Khan ,IPL ,Dinakaran ,
× RELATED கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை:...