×

சிசிடிவியில் பதிவான காட்சிகள் ஏன் வரவில்லை அழிக்கப்பட்டதா ?: ஸ்ரீமதி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி சரமாரி கேள்வி

கள்ளக்குறிச்சி: சிசிடிவியில் பதிவான காட்சிகள் ஏன் வரவில்லை அழிக்கப்பட்டதா ? என ஸ்ரீமதி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி இறந்த பிறகு கொலைசெய்யப்பட்டதாக தயார் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிலையில், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. அப்போது தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் 3 முறை விசாரணை நடைபெற்று வந்தது.

4வது விசாரணையானது இன்று தொடங்கியது. அப்போது விசாரணைக்கு ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞரிடம் ஸ்ரீமதி தாயார் ஏற்கனவே பேசிய பள்ளித்தரப்பும், அவர்கள் பேசிய கால் ரெகார்டு, எஃப்.ஐ.ஆர் அறிக்கையும், பிரேதபரிசோதனை அறிக்கை, அங்கு பதிவான சிசிடிவி காட்சிகளும் கேட்டிருந்தார். அது சரியான முறையில் பதிவாகவில்லை என்று அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் வழக்கை விசாரித்த நீதிபதி ஷாம் ஸ்ரீமதி வழக்கில் அரசுத்தரப்பு வழக்கறிஞரிடம் சரமாரி கேள்வி எழுப்பினார். ஸ்ரீமதி தாயாரிடம் கொடுக்கப்பட்ட சிசிடிவி விடீயோக்கள் 27 சிடிக்கள் செயல்படவில்லை என மாணவியின் தாயார் வைத்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் வகையில் சிசிடிவியில் பதிவான காட்சிகள் ஏன் வரவில்லை? அழிக்கப்பட்டதா அல்லது எதனால் என்பது தொழில்நுட்ப சான்றுடன் நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும். முறையாக ஆவணங்களை அடுத்த முறை பதிவு செய்ய வேண்டும் என்று கூறி எப்.ஐ.ஆர் நகலை உரிய சான்றுடன் அடுத்த மாதம் ஜூன் 19ம் தேதி தாக்கல் செய்யவேண்டும் என்றும் வழக்கை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post சிசிடிவியில் பதிவான காட்சிகள் ஏன் வரவில்லை அழிக்கப்பட்டதா ?: ஸ்ரீமதி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Judge ,Saramari ,Srimati ,Kanyamur school ,Sinnesalam, Kallakurichi district ,Dinakaran ,
× RELATED செல்வாக்கு மிக்க இருவர் தன்னை...