×

தாம்பரம் அருகே ஒரே இரவில் 3 பேர் வெட்டிக் கொலை

சென்னை: தாம்பரம் காவல் ஆணையரக எல்லைப்பகுதியில் நேற்று இரவு வெவ்வேறு இடங்களில் 3 பேர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டுனர் கார்த்திக் ராஜாவை வெட்டிக் கொலை செய்துவிட்டு கும்பல் தப்பி ஓடினர். குன்றத்தூர் அடுத்த மலையம்பாக்கத்தில் செங்கல் சூளை தொழிலாளி ராஜேஷை வெட்டிக் கொன்றுவிட்டு செல்போனை பறித்து சென்றனர். இயற்கை உபாதைக்காக சாலையோரம் சென்றபோது பைக்கில் வந்த கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சென்னை குரோம்பேட்டையில் கொடுக்கல் வாங்கல் தகராறில் தாமஸ் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தாமஸ் என்பவரை வெட்டிக் கொன்ற சபரி குரோம்பேட்டை காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.

The post தாம்பரம் அருகே ஒரே இரவில் 3 பேர் வெட்டிக் கொலை appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Chennai ,Tambaram Police ,Karthik Raja ,Malayambakkam ,Kunradthur ,
× RELATED தாம்பரம் அருகே முடிச்சூரில் இருசக்கர...