×

சிவகிரியில் மே தின பேரணி

 

ஈரோடு, மே 28: ஈரோடு மாவட்டம், சிவகிரியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேற்று முன்தினம் மாலை மே தின பேரணி நடைபெற்றது. மே தினத்தையொட்டி, பல்வேறு தொழிற்சங்கள் சார்பில் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடுமுடி, மொடக்குறிச்சி தாலுகா கமிட்டிகள் சார்பில், சிவகிரியில் நேற்று முன் தினம் மாலை மே தின பேரணி நடத்தப்பட்டது.

தொழிலாளர் மற்றும் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள், கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும். சிவகிரி, அண்ணா மேடையில் தொடங்கிய பேரணி, தேர்வல வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் அண்ணா மேடையில் நிறைவடைந்தது. தொடர்ந்து, அங்கு மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொதுக்கூட்டத்துக்கு சி.பி.எம். சிவகிரி கிளை செயலாளர் எம்.சசி தலைமை வகித்தார். தாலுகா கமிட்டி உறுப்பினர் டி. தங்கவேல் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் ரகுராமன், மூத்த தலைவர் கே.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகேசன், தாலுகா செயலாளர் கனகவேல் ஆகியோர் மே தின சிறப்புரையாற்றினர். மே தின பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் தொழிற்சங்க அமைப்பினர் கலந்துகொண்டனர்.

The post சிவகிரியில் மே தின பேரணி appeared first on Dinakaran.

Tags : May Day rally ,Sivagiri ,Erode ,May Day ,Marxist Communist Party ,Sivagiri, Erode district ,Marxist ,Dinakaran ,
× RELATED சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது