×

இளம்பெண் மாயம்

ஈரோடு, ஜூன் 18: பவானிசாகர் அடுத்துள்ள பகுத்தம்பாளையம், கீராநகரை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் புவனேஸ்வரி (21). இவருக்கு கடந்த 2021ம் ஆண்டு திருப்பூர் வீரம்பாளையம் கடுக்கன்காட்டு புதூரை சேர்ந்த சீனிவாசன் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி பவானிசாகரில் நடைபெற்ற உறவினர் வீட்டு திருமணத்திற்காக புவனேஸ்வரி தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், 13ம் தேதி மாலை தொட்டம் பாளையத்தில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்கி வருவதாக கூறிச்சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, பல்வேறு இடங்களில் குடும்பத்தினர் தேடியும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. மேலும், செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பவானிசாகர் போலீசில் தந்தை பழனிசாமி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இளம்பெண் மாயம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Palaniswami ,Kiranagar, Baguthampalayam ,Bhavanisagar ,Bhubaneswari ,Srinivasan ,Tirupur Veerampalayam Kadukkankattu Pudur ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் சுகாதார செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு