×

பவானி நகராட்சியில் குடிநீர் விரிவாக்க திட்ட பணி ஆய்வு

 

பவானி, ஜூன் 14: பவானி நகராட்சியில் நடைபெற்று வரும் குடிநீர் விரிவாக்க திட்ட பணிகளை நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பவானி நகராட்சி, 10வது வார்டு, குருநாதன் ரோடு பகுதியில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குடிநீர் பகிர்மான குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல்வேறு, பகுதிகளில் பணிகள் நிறைவடைந்த நிலையில், இப்பணிகளை நகர் மன்ற தலைவர் சிந்தூரி இளங்கோவன் நேரில் பார்வையிட்டார்.

அப்போது, பணியின் நிலை, தரம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது, பணிகளை துரிதமாக முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் கொண்டு வரும் வகையில் செயல்பட வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இந்த, ஆய்வின் போது, நகராட்சி பொறியாளர் காளீஸ்வரி, குழாய் ஆய்வாளர் சுரேஷ் மற்றும் ஊழியர்கள் உடனிருந்தனர்.

The post பவானி நகராட்சியில் குடிநீர் விரிவாக்க திட்ட பணி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Bhavani Municipality ,Bhavani ,Sinthuri Ilangovan ,Amruth 2.0 ,10th Ward, Gurunathan Road ,Dinakaran ,
× RELATED பவானி நகராட்சியில் குடிநீர் விரிவாக்க திட்ட பணி ஆய்வு