×

வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை வீடியோ வைரலானதால் எஸ்ஐ, ஏட்டு இடமாற்றம்: விழுப்புரம் எஸ்பி நடவடிக்கை

விழுப்புரம்: வாகன ஓட்டுகளிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்ட வீடியோ வைரலானதை தொடர்ந்து எஸ்.ஐ., ஏட்டு ஆகியோரை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து விழுப்புரம் எஸ்பி தீபக்சிவாச் உத்தரவிட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் நடக்கும் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் விபத்து மற்றும் பாதுகாப்பு பணி உள்ளிட்டவைகளுக்கு விரைந்து சென்று நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல்துறையில் நெடுஞ்சாலை ரோந்து பிரிவு செயல்பட்டு வருகின்றது. இந்தப் பிரிவின் நடவடிக்கையை கண்காணிக்கும் வகையில் அந்த வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

சில இடங்களில் ரோந்து பிரிவு போலீசார் மீது புகார்கள் எழுந்து வருகின்றன. இதனிடையே கோட்டக்குப்பம் முதல் திண்டிவனம் வரை நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் பணியாற்றி வந்த எஸ்ஐ பூமிநாதன், ஏட்டு அப்துல் ரகுமான் ஆகியோர் வாகன ஓட்டிகளிடம் சோதனை என்ற பெயரில் மிரட்டி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இருவரையும் உடனடியாக ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து எஸ்பி தீபக்சிவாச் உத்தரவிட்டுள்ளார்.

 

 

The post வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை வீடியோ வைரலானதால் எஸ்ஐ, ஏட்டு இடமாற்றம்: விழுப்புரம் எஸ்பி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : SI ,Villupuram ,Villupuram SP ,Deepakshiwach ,Ettu ,Villupuram district ,SP ,
× RELATED மேட்டுப்பாளையம்-கோத்தகிரி சாலையில்...