×

பப்புவா நியூகினியாவில் 2000 பேர் உயிருடன் மண்ணில் புதைந்தனர்

மெல்போர்ன்: பப்புவா நியூகினியாவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக கடந்த வெள்ளியன்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. எங்கா மாகாணத்தில் உள்ள யம்பாலி கிராமத்தில் மலைப்பகுதி இடிந்து விழுந்தது. இதில் சுமார் 670பேர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்று ஐநா சபை மதிப்பிட்டு இருந்தது. இது வரை 6 பேரின் சடலங்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீட்பு பணிகளை விரைவுபடுத்திட சர்வதேச நாடுகளின் உதவியை பப்புவா நியூகினியா கோரியுள்ளது. நிலச்சரிவினால் சுமார் 2000 பேர் உயிருடன் மண்ணில் புதைந்துள்ளதாகவும், பெரிய அழிவை சந்தித்துள்ளதாகவும், எனவே சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து மீட்பு பணிகளுக்காக விமானம் மற்றும் பல்வேறு உபகரணங்களை வழங்குவதற்கு ஆஸ்திரேலியா முன்வந்துள்ளது.

The post பப்புவா நியூகினியாவில் 2000 பேர் உயிருடன் மண்ணில் புதைந்தனர் appeared first on Dinakaran.

Tags : Papua New Guinea ,Melbourne ,Yambali ,Enga province ,
× RELATED 43 வயதில் வரலாறு படைத்த உகாண்டா வீரர்!