×

சிங்கப்பூர் ஓபன் இன்று தொடக்கம்

சிங்கப்பூர் ஓபன் பேட்மின்டன் போட்டி இன்று தொடங்குகிறது. அதில் இந்திய வீரர்கள் எச்.எஸ்.பிரணாய், கிடாம்பி ஸ்ரீகாந்த், லக்‌ஷயா சென், பிரியான்ஷூ ராஜ்வத், வீராங்கனைகள் பி.வி.சிந்து, ஆகர்ஷி காஷ்யப் ஆகியோர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கின்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ்/சிராக் ஷெட்டி, கிருஷ்ண பிரசாத்/சாய் பாதீக், பெண்கள் இரட்டையர் பிரிவில் தனிஷா கிறிஸ்டோ/அஸ்வினி பொன்னப்பா, ருத்பாமா பாண்டா/ஸ்வேத்பர்னா பாண்டா, சிம்ரன் சிங்கி/ரித்திகா தாகர் களமிறங்குகின்றனர். கலப்பு இரட்டையர் பிரிவில் சுமீத் ரெட்டி/சிக்கி ரெட்டி, அஷித் சூர்யா/அம்ருதா பிரமுதேஷ், சதீஷ்குமார் கருணாகரன்/ஆத்யா வரியத், வெங்கட் கவுரவ்/ஜூஹி தேவங்கன் பங்கேற்கின்றனர்.

The post சிங்கப்பூர் ஓபன் இன்று தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Singapore Open ,HS Pranai ,Kidambi Srikanth ,Lakshya Sen ,Priyanshu Rajwat ,PV Sindhu ,Agarshi Kashyap ,Satvik Sairaj ,Chirag Shetty ,Dinakaran ,
× RELATED சில்லி பாயின்ட்…