×

தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்பட்டதால் அங்கு கள்ளச்சாராயமும் பெருகவில்லை, அம்மாநில அரசின் வருமானமும் குறையவில்லை. தமிழ்நாட்டில் மது வணிகத்தால் குடும்ப வன்முறைகள், குற்றங்கள், சாலை விபத்துகள், மனநல பிரச்னைகள், தற்கொலைகள், ஆண்மைக் குறைபாடு, இளைஞர்களின் செயல்திறன் குறைவு, பொது அமைதி மற்றும் சட்டம் – ஒழுங்கு பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

மதுவுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பணி செய்வதற்கு தகுதியான இளைஞர்கள் கிடைக்காமல் உற்பத்தி குறைகிறது. எனவே, மது வணிகத்தை விட மதுவிலக்குதான் மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை அளிக்கும். எனவே, தமிழ்நாட்டிலும் உடனடியாக மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ramadoss ,CHENNAI ,BAMA ,Bihar ,Ramadas' ,Dinakaran ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...