×

தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை:பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அளவிலான மின்சார சந்தையிலிருந்தும், தனியார் மின்சார உற்பத்தியாளர்களிடமிருந்தும் தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு கட்டணம் மற்றும் வரியாக ஏற்கனவே வசூலிக்கப்படும் ரூ1.96 காசுகளுடன் கூடுதல் வரியாக 34 காசுகள் சேர்த்து வசூலிக்க மின்சார வாரியம் முடிவு செய்திருக்கிறது. . மின்சார வாரியத்தின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகள், துணி ஆலைகள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரத் தேவையை தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மட்டுமே தீர்க்க முடியாது. அதனால், தனியாரிடமிருந்தும், வெளிச்சந்தையில் இருந்தும் மின்சாரத்தை வாங்குகின்றனர்.

இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து வாங்கப்படும் மின்சாரத்தை தங்கள் ஆலைக்கு கொண்டு வருவதற்காக மின்சார வாரியத்திற்கு சொந்தமான மின் வழித்தடத்தை பயன்படுத்துகின்றனர். அதற்கான கட்டணம் மற்றும் வரியாக யூனிட்டுக்கு ரூ1.94 செலுத்தப்படுகிறது. இதுவே அதிகம் என்று தொழில்துறையினரால் கூறப்படும் நிலையில், இப்போது கூடுதல் வரியை விதிப்பது நியாயமல்ல. எனவே, தனியாரிடமிருந்து தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

The post தொழில் நிறுவனங்கள் வாங்கும் மின்சாரத்திற்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Anbumani ,CHENNAI ,BAMA ,India ,Dinakaran ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...