×

சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மீண்டும் வெயிலின் தாக்கம் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மீண்டும் வெயிலின் தாக்கம் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியதிலிருந்தே வெயிலின் தாக்கம் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக இருந்தது. கரூர் பரமத்தியில் வரலாறு காணாத அளவில் 112 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. வெப்ப அலையின் தாக்கத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் படிப்படியாக வெயில் குறைந்து கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்தது. இதனிடையே தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக சென்னையில் வெப்பத்தின் அளவு 100டிகிரி பாரன்ஹீட் தாண்டி பதிவாகும் என வானிலை மையம் கூறியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னையில் கனமழை பெய்த நிலையில் மழை நீடிக்கும் என மகிழ்ச்சியில் இருந்த மக்களுக்கு வெயில் குறித்த முன்னறிவிப்பு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளுர், ராணிப்பேட்டை , வேலூர் ஆகிய மாவட்டங்களில் வெயிலின் அளவு மீண்டும் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார். கன்னியாகுமரியில் மழை பொழிவு குறைவாகவே இருக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

The post சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் மீண்டும் வெயிலின் தாக்கம் 108 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pradeep John ,Tamil Nadu ,
× RELATED தமிழ்நாட்டில் மீண்டும் 108 டிகிரி...