×

கடமலைக்குண்டு கிராமத்தில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி

வருசநாடு, மே 27: கடமலைக்குண்டு கிராமத்தில் மாநில அளவிலான சிலம்பும் தனித்திறமை போட்டி ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, சுருள்வாள், உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இந்த விழாவில் உலக கலைகள் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு மாநில தலைவர் செபாமாஸ்டர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

உலக கலைகள் மற்றும் விளையாட்டு மாநில பொதுச் செயலாளர் ஜெபாஸ்டீன், மாநில பொருளாளர் பெருமாள் மாநில துணை செயலாளர் சுமதி, மாநில இணை செயலாளர் நிர்மலா தேவி, தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் சிலம்பம் பயிற்சி பன்னீர்செல்வம், மாநில சட்ட ஆலோசகர் அஜய், மாநில துணை செயலாளர் சுவாதி பயிற்சியாளர் கௌதம் மற்றும் கடமலைக்குண்டு கிராம முக்கியஸ்தர்கள் ஏராளமான கலந்து கொண்டனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக நல்லாசிரியர் கோவிந்தன், சிலம்பப் பயிற்சியாளர்கள் உலக கலைகள் மற்றும் விளையாட்டுக் கூட்டமைப்பு தேனி தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகள் செய்திருந்தனர். சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளில் சிறந்து விளங்கிய முதல் இரண்டாம் மூன்றாம் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டிகளுக்கு தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் பயிற்சியாளர்கள் மற்றும் சிலம்பம் வீரர்கள் கலந்துகொண்டனர்.

The post கடமலைக்குண்டு கிராமத்தில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி appeared first on Dinakaran.

Tags : State Level Silambam Competition ,Kadamalaikundu Village ,Varusanadu ,World Federation of Arts and Sports State ,President ,Sepamaster ,Dinakaran ,
× RELATED டூர் போக பிளான் போடுறீங்களா… இத மிஸ்...