×

வேளாண் மாணவர்கள் கிராமப்புற மதிப்பீடு

 

பழநி, மே 27: மதுரை வேளாண் கல்லூரி மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின்கீழ் பழநி பகுதியில் உள்ள கிராமங்களில் தங்கி விவசாயிகளுக்குகு அறிவுரை மற்றும் பயிற்சி அளித்து வருகின்றனர். இதன்படி வேளாண் கல்லூரி மாணவர்கள் ஸ்ரீமத் தங்கராஜ் தலைமையிலான குழுவினர் விவசாயிகளிடம் கிராமங்களின் விவசாயம், நில அமைப்பு பயிர் வகைகள், வரலாற்று பின்புலம் குறித்து பயிற்சி அளித்தனர்.

இம்மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக சமூக வரைபடம், காலக்கோடு, இயக்க வரைபடம், தினசரி வேலை அட்டவணை, பருவகால நாட்காட்டி உள்ளிட்ட கருவிகள் பயன்படுத்தப்பட்டது. தங்களின் விவசாய நிலம் குறித்த தன்மையை அறிந்து கொள்வதற்காக ஏராளமான விவசாயிகள் மதிப்பீட்டு பணியில் கலந்து கொண்டனர்.

The post வேளாண் மாணவர்கள் கிராமப்புற மதிப்பீடு appeared first on Dinakaran.

Tags : Palani ,Madurai Agricultural College ,Srimad Thangaraj ,Agriculture College ,
× RELATED பன்றிகள் அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு