×

நாகப்பட்டினம் நகர பகுதியில் விடிய விடிய அதிரடி மதுவிலக்கு சோதனையில் 5 பெண்கள் உள்பட 18 பேர் கைது

 

நாகப்பட்டினம், மே 27: நாகப்பட்டினம் நகப பகுதியில் விடிய விடிய நடத்திய மதுவிலக்கு சோதனையில் 5 பெண்கள் உட்பட 18 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்த்தில் புதுச்சேரி மாநில மதுபானம், கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக எஸ்பி ஹர்ஷ் சிங்குக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் நாகப்பட்டினம் நகர பகுதியில் தனிப்படை போலீசார் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் எட்டு தனிப்படை அமைக்கப்பட்டது.

இவர்கள் நேற்று முன்தினம் இரவு தொடங்கி விடிய விடிய மதுவிலக்கு சோதனையில் திட்டச்சேரி, திருமருகல், வலிவலம் திருக்குவளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சோதனை நடத்தினர். இதில் 5 பெண்கள் உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 1000 லிட்டர் பாக்கெட் சாராயம், 250 வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

The post நாகப்பட்டினம் நகர பகுதியில் விடிய விடிய அதிரடி மதுவிலக்கு சோதனையில் 5 பெண்கள் உள்பட 18 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Nagapattinam Nagaba ,SP ,Puducherry State Liquor ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறை தீர் நாள் கூட்டம்