×

பட்டுக்கோட்டையில் 11 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது

தஞ்சாவூர்,மே26: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நரிக்குறவர் காலனியை சேர்ந்த முனியம்மாள் என்பவர் வீட்டில் கஞ்சா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்படி பட்டுக்கோட்டை டிஎஸ்பி பாஸ்கர் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் வீட்டில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முனியம்மாள் வீட்டில் பண்டல் பண்டலாக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் எடை 11 கிலோ இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து கஞ்சாவை பட்டுக்கோட்டை நகர காவல் துறையினர் பறிமுதல் செய்து பாரதிநகர் பகுதியை சேர்ந்த முனியம்மாள் மற்றும் தேனி மாவட்டத்தை சேர்ந்த லட்சுமி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பட்டுக்கோட்டையில் 11 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த 2 பெண்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Pattukottai ,Thanjavur ,Muniyammal ,Pattukottai Narikuruvar Colony ,Thanjavur district ,DSP Bhaskar ,Inspector ,Raja ,
× RELATED வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி...