×
Saravana Stores

மின்கம்பியில் மரம் சரிந்து விழுந்ததால் அரசுதுறை அலுவலகங்களில் மின்தடை

நாகப்பட்டினம், மே 26: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வனத்துறை அலுவலக சுற்றுசுவரில் இருந்த உதிய மரம் நேற்று முன்தினம் (24ம் தேதி) நள்ளிரவு அடித்த காற்றின் காரணமாக சரிந்து விழுந்தது. அப்பகுதியில் இருந்த மின்கம்பியில் மரம் விழுந்ததால் மின்கம்பம் பழுதடைந்ததுடன் மின்சார ஒயர்களும் அறுந்து கீழே விழுந்தது. இதனால் தோட்டக்கலைத்துறை, வனத்துறை அலுவலகம், நுகர்பொருள் வாணிப கழகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலகம் என 7 துறைகளில் மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து நாகப்பட்டினம் வெளிப்பாளையம் மின்சாரவாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நள்ளிரவு நேரம் என்பதால் மின் ஊழியர்கள் மின்சார தடையை சீர் செய்ய முடியவில்லை. இதையடுத்து நேற்று (25ம் தேதி) காலை மின்சார ஊழியர்கள் 6க்கும் மேற்பட்டவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்சார ஒயர்களில் விழுந்த மரத்தின் கிளை மற்றும் மரத்தை முழுமையாக வெட்டி அப்புறப்படுத்தினர்.இதன் பின்னர் சேதமடைந்த மின்கம்பத்திற்கு பதிலாக மாற்று மின்கம்பத்தை அருகில் நட்டு மின்சாரத்தை சீர் செய்தனர். அதையடுத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

The post மின்கம்பியில் மரம் சரிந்து விழுந்ததால் அரசுதுறை அலுவலகங்களில் மின்தடை appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Uthiya ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்ட...