×

விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் நுண்கலை போட்டி பரிசளிப்பு

 

விருதுநகர், மே 26: விருதுநகர் காமராஜ் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கான நுண்கலை போட்டிகள் நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக ரோட்டரி சங்க தலைவர் சண்முகம் கலந்து கொண்டார். நுண்கலை போட்டியில் மாணவ, மாணவிகளுக்கு பரதநாட்டியம், நாட்டுப்புற நடனம், குழு நடனம், பாட்டு போட்டி, நாடகம் என பலவிதமான போட்டிகள் நடத்தப்பட்டன. பின்னர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி செயலாளர் தர்மராஜன், துணை தலைவர் பாலகிருஷ்ணன், துணை செயலாளர் முருகன், பொருளாளர் ஸ்ரீ முருகன், முதல்வர் செந்தில் ஆகியோர் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

The post விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் நுண்கலை போட்டி பரிசளிப்பு appeared first on Dinakaran.

Tags : Kamaraj College of Engineering ,Virudhunagar ,Kamaraj College of Engineering and Technology ,Rotary Club ,President ,Shanmugam ,
× RELATED விருதுநகர் மாவட்டத்தில் மீண்டும்...