×

உடுமலை அரசு மருத்துவமனையில் சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம்

 

உடுமலை, மே 26: அரசு நிர்ணயித்த சம்பளத்தை வழங்க கோரி உடுமலை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடுமலை அரசு மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணியை புறக்கணித்து, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 2வது நாளாக நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து அவர்கள் கூறியதாவது:

ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக 40 பேர் இங்கு வேலை செய்கிறோம். கலெக்டர் உத்தரவுப்படி எங்களுக்கு தினசரி 610 ரூபாய் சம்பளம் தர வேண்டும். ஆனால் 320 ரூபாய்தான் ஒப்பந்த நிறுவனம் தருகிறது. இதுபற்றி, அரசு துறைகளில் புகார் செய்து 60 நாட்கள் ஆகிறது. எந்த நடவடிக்கையும் இல்லை. பிஎப் பிடித்தம் செய்கிறார்கள்.

ஆனால் பிஎப் கணக்கில் பணம் எதுவும் இல்லை என்கிறார்கள். சீருடை, சீமார், ஆசிட் ஆகியவற்றை எங்கள் சம்பளத்திலேயே வாங்க சொல்கிறார்கள். ஒப்பந்த நிறுவனத்தினர் எதுவும் தருவதில்லை. 2 வருட சம்பள அரியர்ஸ் பணம் தரவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் உயிர்விடும் போராட்டம் ஆரம்பிப்போம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post உடுமலை அரசு மருத்துவமனையில் சம்பளம் கேட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Udumalai Government Hospital ,Udumalai ,Dinakaran ,
× RELATED மலைவாழ் குழந்தைகளுக்கு உதவி