×

பைபர் படகுகள் கடலுக்கு செல்லாததால் ₹10லட்சம் மீன்பிடி வர்த்தகம் பாதிப்பு

வேதாரண்யம், மே 25: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் கடல் சீற்றம் காரணமாக பைபர் படகுகள் ஒரு வாரமாக கடலுக்கு செல்லாததால் ரூ.10 லட்சம் மீன்பிடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் கடலில் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றமாக காணப்படுகிறது இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது மேலும் புயல் எச்சரிக்கை காரணமாக நாகையில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாலும் கோடியக்கரை, ஆறுகாட்டுதுறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5000 மீனவர்கள் நேற்று 7வது நாளாக மீன் பிடிக்கச் கடலுக்கு செல்லவில்லை. 1000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலம் என்பதால் விசைப்படகுகள் மீன் பிடிக்க செல்லாத நிலையில் குறைந்த தூரம் சென்று மீன் பிடிக்கும் பைபர் படகுகள் கடல் சீற்றம் காரணமாக மீன்பிடிக்க ஏழு நாட்களாக செல்லவில்லை. இதனால் ஃபைபர் படத்தின் மீனவர்களின் மீன்வர்த்தகம் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் சுமார் பத்து லட்சம் மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் வீடுகளில் முடங்கிப் போய் உள்ளனர். சில மீனவர்கள் தங்கள் படகுகளின் வலைகளை சரி பார்க்கும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது.

The post பைபர் படகுகள் கடலுக்கு செல்லாததால் ₹10லட்சம் மீன்பிடி வர்த்தகம் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Vedaranyam ,Nagapattinam district ,Bay of Bengal ,Dinakaran ,
× RELATED நடுக்கடலில் படகு கவிழ்ந்தது 11 மணி நேரம் உயிருக்கு போராடிய 3 மீனவர்கள்