×

பளுகல் அருகே மாயமான நர்சிங் மாணவி மீட்பு

 

கருங்கல், மே 25: குமரி மாவட்டம் பளுகல் கண்ணமாமூடு பகுதியை சேர்ந்தவர் ஆஷிகா (20). இவர் அந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். ஆஷிகா நேற்று முன்தினம் திடீரென மாயமானார்.இதையடுத்து அவரது பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். எங்கு தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாயார் லீனா பளுகல் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான ஆஷிகாவை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கருங்கல் பேருந்து நிலையப் பகுதியில் சுற்றி திரிந்த ஒரு மாணவியை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் மாயமான மாணவி ஆஷிகா என்பது தெரிய வந்தது. இது குறித்து பளுகல் போலீசாருக்கும் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து மாணவியை பெற்றோரிடம் கருங்கல் போலீசார் ஒப்படைத்தனர்.

The post பளுகல் அருகே மாயமான நர்சிங் மாணவி மீட்பு appeared first on Dinakaran.

Tags : Baluchal ,Karungal ,Ashika ,Palukal Kannamamudu ,Kumari district ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பழகி பெண்ணிடம் 13 பவுன் நகை மோசடி கருங்கல் அருகே பரபரப்பு