×

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு: முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: மன்னார்குடி அரசு ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் அறிவிப்பு

மன்னார்குடி, மே 24: தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மன்னார்குடி மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகனன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 2024 – 25 ம் ஆண்டிற்கான தொடக்கக் கல்வி பட்டய படிப்பில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வாயிலாக மே 31ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.எனவே, மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப் பிக்கலாம்.விண்ணப்பப் படிவம் மற்றும் மாணவர் சேர்க்கை கையேடு ஆகி யவை www.tnscert.org என்ற இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பில் சேர விரும்பும் மாணவ, மாணவி யர்கள் மேற்கண்ட இணைய தளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் அல் லது மன்னார்குடி அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தையோ அல்லது கொரடாச்சேரி ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தையோ நேரடியாக அணுகலாம். இது தொடர்பான விவரங்களை மன்னார்குடி மாவட்ட அரசு ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டும் அறிந்து கொள்ளலாம். 01.06.2024 முதல் மேற்கண்ட நிறுவனத்தில் நேரடி மாணவர் சேர்க்கை நடை பெறும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு: முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: மன்னார்குடி அரசு ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Mannargudi Government Teacher Education Institute ,Mannargudi ,Mannargudi District Government Teacher Education and Training Institute ,Mailavaganan ,Mannargudi Government Teacher Education Training Institute ,Dinakaran ,
× RELATED டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து 350 காஸ்...