×

தஞ்சாவூர் கொடிக்காலூர் பகுதியில் குறுவை சாகுபடிக்கு இயந்திரம் மூலம் நடவு

தஞ்சாவூர், மே 24: தஞ்சாவூரை கொடிக்காலூர் பகுதியில் குறுவை சாகுபடிக்காக இயந்திரம் மூலம் நடவு பணி நடைபெற்று வருகிறது.தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12ம் தேதி தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்படுவது வழக்கம். இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் கொடிக்காலூர் பகுதியில் பம்பு செட்டு மூலம் குறுவை சாகுபடிக்கான இயந்திர நடவு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அது மட்டும்ன்றி தஞ்சாவூர் சுற்று வட்டார பகுதிகளில் குறுவை சாகுபடிக்காக ஒரு பக்கம் விளை நிலங்களை உழும் பணிகளும், உழவு செய்யப்பட்டுள்ள பல விளை நிலங்களில் தெளிப்பு முறை மூலம் விதை நெல்லை தெளித்து சாகுபடி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

 

The post தஞ்சாவூர் கொடிக்காலூர் பகுதியில் குறுவை சாகுபடிக்கு இயந்திரம் மூலம் நடவு appeared first on Dinakaran.

Tags : Kodikalur ,Thanjavur ,Tamil Nadu ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள்...