×

சீர்காழியில் பரபரப்பு கோழியை வேட்டையாடிய நல்ல பாம்பு பிடிபட்டது

 

சீர்காழி, மே 24: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையம் அருகே ராதாகிருஷ்ணன் நகரில் மேரி என்பவரது வீட்டில் இருந்த கோழியை 6 அடி நீளம் உள்ள நல்ல பாம்பு கொத்தி கொன்றுவிட்டு வீட்டின் சுவற்றில் இருந்த வெடிப்பில் புகுந்து விட்டது. இதனால் மேரி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து பாம்பு பிடிப்பதில் பயிற்சி பெற்ற பாண்டியனுக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற பாண்டியன் சுவற்றின் வெடிப்பில் மறைந்திருந்த நல்ல பாம்பை பல மணி நேரம் போராடி மீட்டு வனப்பகுதிக்கு எடுத்துச் சென்று விட்டார். பாம்பு பிடிபட்டதால் மேரி குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர்.

The post சீர்காழியில் பரபரப்பு கோழியை வேட்டையாடிய நல்ல பாம்பு பிடிபட்டது appeared first on Dinakaran.

Tags : Sirkhazi ,Sirkazhi ,Mayiladuthurai District Sirkazhi district ,Sirkazhi Railway Station ,Radhakrishnan Nagar ,Mary ,
× RELATED சீர்காழியில் இரவில் கொட்டி தீர்த்த மழை