×

கெயில் நிறுவனம் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

 

ஓசூர், மே 24: ஓசூரில் விவசாய நிலத்தில் கெயில் நிறுவனம் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து, சப் கலெக்டர் அலுவலகம் எதிரில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஓசூர் அருகே எடப்பள்ளி, இடையநல்லூரர், சூதாளம், நாகொண்டப்பள்ளி விவசாயிகளின் பட்டா நிலத்தில், கெயில் நிறுவனம் குழாய பதிக்கும் திட்டத்தை விவசாயிகள் அனுமதி பெறாமல், மாவட்ட நிர்வாகமும், கெயில் குழாய் பதிக்கும் நிர்வாகமும் சேர்ந்து குழி தோண்ட முயற்சித்ததை விவசாயிகள் தடுத்து நிறுத்தினர்.

பின்னர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், மாநில துணை செயலாளர் பெருமாள், ஓசூர் ஒன்றிய தலைவர் திம்மாரெட்டி தலைமையில், ஓசூர் சப் கலெக்டரிடம் நேற்று மனு அளித்த போது, தேர்தல் காலம் என்று கூறி, மனுவை வாங்க மறுத்ததால், விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பிரகாஷ், முருகேசன், ராஜூ, தேவராஜ், மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ராஜாரெட்டி, ஜெயராமன், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, விவசாய தொழிலாளர் சங்க கோவிந்தசாமி, சிஐடியூ ஸ்ரீதர், துணை தலைவர் மூர்த்தி, துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் 80க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பின்னர், மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

 

The post கெயில் நிறுவனம் குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : GAIL ,Hosur ,Sub Collector ,Edapally ,Udayanallurer ,Suthalam ,Nagondapally ,
× RELATED குழாய் பதிப்பதை தடுத்து விவசாயிகள் போராட்டம்