- Kumbabhishek
- நாவல்கன்யன் கோயில்
- Kallal
- சிவகங்கை
- ஸ்ரீவள்ளி
- தேவசேனா
- சமீதா சுப்பிரமணிய சுவாமி கோயில்
- கருங்குளம் பஞ்சாயத் நாவல்கனியம்மடம்
- முருகேசன்
- ஜெயலேட்சுமி
சிவகங்கை, மே 24: கல்லல் அருகே ஆ.கருங்குளம் ஊராட்சி நாவல்கணியான்மடத்தில் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. தொழிலதிபர் முருகேசன், இவரது மனைவி ஜெயலெட்சுமி ஏற்பாட்டின் பேரில் கடந்த சில மாதங்களாக நடைபெற்ற கோயில் திருப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில் யாகசாலை அமைக்கப்பட்டு கடந்த 20ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் துவங்கியது.
நான்கு கால யாக பூஜைகள் நிறைவு பெற்ற நிலையில் நேற்று காலை யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீருக்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு, வேத விற்பன்னர்கள் புனித நீரை தலையில் சுமந்து கோயிலை சுற்றி வளம் வந்தனர். பின்னர் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. புனித நீர் கூடியிருந்த மக்களின் மேல் தெளிக்கப்பட்டு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று மகா தீபாரணை காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏராளமான கிராமத்தினர் வருகை தந்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து கும்பாபிஷேக விழாவையொட்டி கோயில் முன்புறம் வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகளில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், சிவகங்கை எம்எல்ஏ செந்தில்நாதன், பாஜ மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன், மாவட்டத்தலைவர் மேப்பல் சக்தி, சிவகங்கை மாவட்ட ஊராட்சி துணைத் தலைத்தலைவர் சரஸ்வதி அண்ணா, செல்வப்பாண்டி, திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
The post கல்லல் அருகே நாவல்கணியான்மடத்தில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.