×

நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்துள்ளது: திட்ட ஆலோசகர் தகவல்

 

காரைக்குடி, மே 24: காரைக்குடியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சுரேஷ்குமார் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து முன்னிலை வகித்தார். தேவகோட்டை கோட்டாசியர் பால்துரை தலைமை வகித்தார். நான் முதல்வன் திட்ட கல்வி ஆலோசகர் கலைமணி கருணாநிதி ஆலோசனை வழங்கி பேசுகையில், தமிழ்நாடு அரசு சார்பில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு,

நான் முதல்வன் திட்டம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டங்களால் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்வது அதிகரித்துள்ளது. பிளஸ் 2 முடித்த பிறகு வேலைவாய்ப்புடன் கூடிய பல்வேறு படிப்புகள் உள்ளன. பொறியியல் கவுன்சலிங் பாஸ்வேர்டுகளை யார் கேட்டாலும் தர வேண்டாம். அரசு வழங்கும் திட்டங்களை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும், என்றார்.
நிகழ்ச்சியில் தாசில்தார் தங்கமணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அழகுமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். தேவகோட்டை தனி வட்டாசியர் ராஜரத்தினம் நன்றி கூறினார்.

The post நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை உயர்ந்துள்ளது: திட்ட ஆலோசகர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ian ,Karaikudi ,My College Dreams ,Adi Dravidar ,Tribal Welfare Department ,Adi Dravidar Welfare Officer ,Suresh Kumar ,Principal Education Officer ,Balumuthu ,Devakottai… ,Naan Multuvan ,Dinakaran ,
× RELATED அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக டவுன்...