×

மதுரை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

மதுரை, மே 24: மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ. தளபதி எம்எல்ஏ அறிக்கை: மதுரை மாநகர் மாவட்டம் திமுக சார்பில், மாநகர் மாவட்ட கழக செயற்குழு கூட்டம் நாளை (மே 25) மாலை 6 மணியளவில் பசுமலை கோபால்சாமி திருமண மண்டபத்தில் அவைத்தலைவர் மா.ஒச்சுபாலு தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா சம்மந்தமாக, கழகத்தினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது.

எனவே கூட்டத்திற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி கழக, வட்ட கழக செயலாளர்கள், ஒன்றிய, பேரூர், கிளை கழக செயலாளர்கள், அணி அமைப்பாளர்கள், மாமன்ற உறுப்பினர்கள், கழக முன்னோடிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post மதுரை மாநகர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Madurai Municipal District Dimuka Executive Committee ,Madurai ,Madurai Municipal District ,Co. Commander ,MLA ,Madurai Municipal District Dimuka ,Municipal District Corporation ,Executive ,Committee ,Pasumalai Gopalsami ,Madurai Municipal District Dimuka Executive Committee Meeting ,Dinakaran ,
× RELATED உத்தபுரம் கோயில் வழக்கு: ஆட்சியர் பதில்தர ஆணை