×

தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம்

 

தாம்பரம், மே 24: நெம்மேலி கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால் தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலம், பல்லாவரம் பகுதிகளில் 22, 23, 25, 35 முதல் 38 ஆகிய வார்டுகளுக்கு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் மூலம் நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் தினசரி 6.50 எம்எல்டி குடிநீர் பெறப்பட்டு, ராதா நகர், நேரு நகர், காயத்ரி நகர், குளக்கரை, என்ஜிஓ காலனி ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் வழியாக அப்பகுதி மக்களுக்கு, 3 நாட்களுக்கு ஒருமுறை என்ற கால இடைவெளியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேற்படி, நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, இன்று (24ம் தேதி) முதல் 2.6.2024 வரை தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலம், பல்லாவரம் பகுதியில் 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது என்பதை பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும், பொதுமக்கள் அனைவரும் குடிநீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்துமாறு இதன்மூலம் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் இன்று முதல் ஜூன் 2ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Corporation ,Thambaram ,Nemmeli ,Chennai ,Tambaram Corporation ,3rd Zone ,Pallavaram ,
× RELATED சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை...