×

பொன்னமராவதி அருகே சூரப்பட்டி தாதையா கோயில் கும்பாபிஷேகம்

பொன்னமராவதி, மே 23: பொன்னமராவதி அருகே உள்ள சூரப்பட்டி தாதையா கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாவின் தொடக்கமாக கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாகசாலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, லட்சுமி பூஜை முதற்கால யாகபூஜைகள் மற்றும் இரண்டாம் கட்ட பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரை கும்பத்தில் ஊற்றி தாதையா சுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை காரையூர் போலீசார் செய்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

The post பொன்னமராவதி அருகே சூரப்பட்டி தாதையா கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Tags : SURAPATTI DADAIYA TEMPLE ,KUMBAPHISHEKAM ,PONNAMARAWATI ,Kumbaphishek ,Ganpati Homam ,Navakraga Homam ,Ko Pooja ,Lakshmi ,Yakhapujas ,Surapati Dadaiya Temple Kumbapishekam ,
× RELATED பணிமனை முன்பு பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும்