×

அரசு போக்குவரத்து கழகங்களில் ஓராண்டு தொழிற்பயிற்சி

 

தஞ்சாவூர், ஜூன் 15: அரசு போக்குவரத்து கழகங்களில் பொறியியல் பட்டதாரிகள், பட்டயபடிப்பு படித்தவர்கள், கலை, அறிவியல், வணிக பட்டதாரிகள் ஓராண்டு தொழிற்பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் பொது மேலாளர் ராஜசேகர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்துக்கு உட்பட்ட நாகப்பட்டினம், கும்பகோணம் புதுக்கோட்டை, காரைக்குடி, திருச்சி, கரூர் ஆகிய 6 மண்டலங்கள் மற்றும் தென்மண்டல தொழில்பழகுநர் பயிற்சி வாரியம் இணைந்து நடத்தும் தகுதியான பொறியியல் பட்டம், பட்டயப்படிப்பு (இயந்திரவியல், தானியங்கிவியல்) மற்றும் பொறியியல் அல்லாத கலை, அறிவியல், வணிக பட்டதாரிகள் 2020, 2021, 2022 2023ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஓராண்டு நடத்தும் தொழிற்பயிற்சிக்காக www. boat-srp.com < http://boat-srp.com/ > என்ற இணையதளம் வழியாக அடுத்த மாதம் ஜூலை 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அரசு போக்குவரத்து கழக கும்பகோணம் கோட்டம் பொது மேலாளர் ராஜசேகர் செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

The post அரசு போக்குவரத்து கழகங்களில் ஓராண்டு தொழிற்பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Government Transport Corporations ,Thanjavur ,General ,Government Transport Corporation ,Kumbakonam Division ,Rajasekar ,Dinakaran ,
× RELATED அரசு பேருந்துகளில் சாதாரண நாட்களில்...