×

வாட்ச்மேன் டூவீலர் திருட்டு

சிவகாசி, மே 23: மாயமான வாட்ச்மேன் டூவீலரை போலீசார் தேடி வருகின்றனர். சிவகாசி அருகே பாறைபட்டி இ.பி.தெருவை சேர்ந்தவர் ராசு(60). இவர் சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே ஹோட்டலில் வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் வீட்டில் இருந்து ஹோட்டலுக்கு வந்த ராசு தனது டூவீலரை வெளியே நிறுத்தி விட்டு மறுநாள் பார்த்தார். அப்போது அங்கு டூவீலர் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து டூவீலரை திருடி சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

The post வாட்ச்மேன் டூவீலர் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Watchman Two Wheeler ,Rasu ,Bhikhapatti E.P. Street ,Watchman ,wheeler ,
× RELATED சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி