×

₹42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை

அரூர், மே 23: அரூர் அடுத்த கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில், வாரந்தோறும் புதன்கிழமை கால்நடை சந்தை நடப்பது வழக்கம். இந்த சந்தைக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருவண்ணமலை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வெள்ளாடு, செம்மறி ஆடு, கறவை மாடுகள், எருமை, இறைச்சிக்கு மாடு, நாட்டுக்கோழி மற்றும் சேவல் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வெளிமாநில மற்றும் தமிழத்தின் பல்வேறு மாவட்டங்களை சேந்த வியாபாரிகள், கால்டைகளை வாங்க வருகின்றனர்.

நேற்று நடந்த சந்தையில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் என கால்நடைகளை கொண்டு வந்தனர். இதில் ஒரு மாடு ₹6,000 முதல் ₹47,500 வரையும், ஆடுகள் விலை ₹5,200 முதல் ₹9,500 வரை விற்பனையானது. நேற்றைய சந்தையில், ₹42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post ₹42 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Aroor ,Gopinathampatti Kootrodu Pulutiyur ,Dharmapuri ,Krishnagiri ,Salem ,Namakkal ,Thiruvannamalai ,
× RELATED ரூ.90 லட்சம் மதிப்பில் சாலை விரிவாக்கம்