×

அதிமுக தலைமை நிர்வாகிகள் எதிர்ப்பு எதிரொலி; ராகுல் காந்தியை புகழ்ந்த எக்ஸ் தள பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு

சென்னை: அதிமுக நிர்வாகிகள் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், ராகுல் காந்தியை பாராட்டி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவை செல்லூர் ராஜு நேற்று அதிரடியாக நீக்கினார். நான் பார்த்து, நெகிழ்ந்து, ரசித்த இளம் தலைவர் ராகுல்காந்தி என எக்ஸ் தளத்தில் செல்லூர் ராஜு பதிவிட்டு இருந்தார். தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லாதபோது, அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரே காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டது அதிமுக நிர்வாகிகள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

மேலும் அதிமுக நிர்வாகிகள் பலரும் செல்லூர் ராஜுவை தொடர்பு கொண்டு அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதிமுக கட்சி தலைமை, செல்லூர் ராஜுவின் இந்த நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டது. இதையடுத்து செல்லூர் ராஜு தனது எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தியை புகழ்ந்து பேசிய பதிவை நேற்று அதிரடியாக நீக்கியுள்ளார்.

The post அதிமுக தலைமை நிர்வாகிகள் எதிர்ப்பு எதிரொலி; ராகுல் காந்தியை புகழ்ந்த எக்ஸ் தள பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Sellur Raju ,Rahul Gandhi ,CHENNAI ,Sellur ,Dinakaran ,
× RELATED பாஜக ஆதரவு நிலையை எடுத்ததாக வேலுமணி...