×

நாகப்பட்டினத்தில் கச்சா எண்ணெய் கசிவு விவகாரம்; சிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி கிராமத்தில் சிபிசிஎல் நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் குழாயில் இருந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் கச்சா எண்ணெய் கசிந்து கடலில் கலந்தது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரணை நடத்தினர்.

ஏற்கனவே நடந்த விசாரணையில், குழு அமைத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருந்தனர். ஆய்வறிக்கையில், 10 டன் அளவிலான கச்சா எண்ணெய் கடலில் கலந்துள்ளதாகவும் அது சிபிசிஎல் நிறுவனம் சக்கர் கருவிகள் மூலம் எண்ணெய் உறிஞ்சப்பட்டது. சுற்றுச்சூழல் தாக்கம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அரசு தரப்பு வழக்கறிஞர் சண்முகம், சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றாலும் இது போன்ற செயல் தண்டனைக்குரியது எனவே சிபிசிஎல் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதத்தை முன்வைத்தார். அனைத்து தரப்பு வாதமும் முடிந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது. அப்போது எண்ணெய் கசிவு ஏற்படுத்திய குற்றத்திற்காக சிபிசிஎல் நிறுவனம் 5 கோடி ரூபாய் தொகையை அபராதமாக தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

The post நாகப்பட்டினத்தில் கச்சா எண்ணெய் கசிவு விவகாரம்; சிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CBCL ,National Green Tribunal ,CHENNAI ,CPCL ,Nagur Pattinacherry ,Nagapattinam district ,South Zone National ,Dinakaran ,
× RELATED சிபிசிஎல் நிறுவனத்துக்கு ரூ.5 கோடி...